IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தொற்று பரவியுள்ளது. கொரோனா தொற்றால் 22,025 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவிலும் கொரனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதனை தடுக்க ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்துள்ளது. அதனால் பல்வேறு தரப்பினர் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். மேலும் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் ரூ.51 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader