IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

84

மகர விளக்கு கால பூஜைகளுக்காக, சபரி மலை அய்யப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை மண்டல பூஜை நிறைவு பெற்று, நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜன.15ந்தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது. மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து 18-ம் படி வழியாக இறங்கி, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். பின், பக்தர்கள் 18ம் படி வழியாக, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு, 11:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

Related Posts
1 of 3

பின்னர் நாளை அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்படும் அப்போது தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரரு, நெய் அபிசேகத்தை துவக்கி வைப்பார். தொடர்ந்து ஜன., 19 வரை, அனைத்து நாட்களிலும், அதிகாலை, 3:15 மணி முதல் இரவு 11:30 மணி வரை, அய்யப்பனுக்கு நெய் அபிசேகம் நடைபெறும்.

விழா நாட்களில் காலை, 7:30 மணிக்கு உஷபூஜை, மதியம் களபாபிசேகம், உச்சபூஜை, இரவு, 7:00 மணிக்கு புஷபாபிசேகம், 10:00 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கும். ஜன., 15ல், மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அன்று மாலை, 6:30 மணிக்கு தீபாராதனைக்கு பின், பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரியும். அதிகாலை, 2:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகர சங்கரம பூஜை நடைபெறும். ஜன., 20 ந்தேதி இரவு, 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜன., 21ந்தேதி காலை, 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.