IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பம்பையில் பல மணி நேரம் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்

54

சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் பம்பையில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

Related Posts
1 of 1,195

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டதால் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், நிலக்கல்லில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பகுதி, பகுதியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இந்தாண்டு அதிகமாக இருப்பதால், ஐயப்பனை தரிசிக்க சுமார் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ஐய்யப்ப பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.