IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சபரிமலை அய்யப்பன் கோயிலில் ரூ.263 கோடி வருமானம்

Get real time updates directly on you device, subscribe now.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனத்தின் போது சுமார் ரூ.263 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகர ஜோதி காட்சி மிக முக்கிய நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வர்.

இந்தாண்டுக்கான மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 20-ந்தேதி நடை திறக்கப்பட்டது. ஜனவரி 15ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. இதைதொடர்;ந்து நேற்று அதிகாலையில் நடை சாத்தப்பட்டது‌.  மகரவிளக்கு பூஜையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது சுமார் 263 கோடி 46 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகக் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கிடைத்த வருமானத்தை விட 95 கோடியே 35 லட்சம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயில் நடை, மலையாள கும்ப மாத பூஜைக்காக பிப்ரவரி 13-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.

#sabarimala #aiyappan #temple #263crores #revenue

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader