IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து ரஷ்யா சாதனை! முதல்கட்ட சோதனையில் வெற்றி

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. ரஷியாவில் கடந்த மே மாதங்களில் தான் கொரோனா வைரஸ் அதீத தாக்கத்தை ஏற்படுத்தியது. தினந்தோறும் சர்வ சாதாரணமாக சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதியானது.

தற்போது கொரோனா பாதிப்பில் உலகில் மோசமான நாடுகளில் பட்டியலில் 3ம் இடத்தில் ரஷ்யா உள்ளது. கொரோனா வைரசை அழித்தாக வேண்டும் என்றால் முதலில் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்தாக வேண்டும்.

அதற்கான ஆராய்ச்சியில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு கடும் போட்டியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளை முடித்துக் கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற கட்டத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் ரஷிய ராணுவத்தில் உள்ள 50 அதிகாரிகள் இந்த பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிப்பதற்காக 5 பெண்கள் உள்ளிட்ட 50 ராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தது.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரஷிய ராணுவ அமைச்சகத்தின் 48-வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும். இங்கு தான் எபோலா வைரஸ் தொற்று மற்றும் மெர்ஸ் வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader