12.1 C
Munich
Monday, October 3, 2022

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7.61 சதவீதம் வீழ்ச்சி

Must read

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 76.87 என்ற புதிய உச்சபட்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ள சூழலில், நிலைமை சீரடைந்து பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் அனைத்து வகையான வாகனங்களும் சுமார் 80 சதவீதத்திற்கு இயங்கவில்லை. இதனால் கச்சா எண்ணெயின் மதிப்பு பல மடங்கு குறைந்திருக்கிறது.

அடுத்து வரும் வாரங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 78 வரையிலும் வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ரூபாய் மதிப்பை சரி செய்யும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.

நேற்றைய தினப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 76.83 ஆக முடிவடைந்திருந்தது. நடப்பாண்டில் மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப 547 காசுகள் அல்லது 7.61 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article