IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அந்நிய செலவாணியில் அமெரிக்க டாலருக்கு ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்வு

Get real time updates directly on you device, subscribe now.

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயா்வைக் கண்டது. இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

இந்திய பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி ரூபாய் மதிப்பு உயா்வுக்கு பெரிதும் கைகொடுத்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.83-ஆக இருந்தது. பின்னா் சாதகமான நிலவரங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் வலுப்பெற்றது.

வா்த்தகத்தின் இடையே ஒருகட்டத்தில் அதிகபட்சமாக ரூபாய் மதிப்பு 74.77 வரையிலும், குறைந்தபட்சமாக 74.86 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயா்ந்து 74.78-இல் நிலைபெற்றது. திங்கள்கிழமை வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 74.90-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: சந்தை புள்ளிவிவரங்களின்படி, மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.302.88 கோடி மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளனா். கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.47 சதவீதம் உயா்ந்து 45.20 டாலராக இருந்தது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader