12.1 C
Munich
Monday, October 3, 2022

மதுரையில் ராயல்ஓக்கின் முதல் கிளை திறப்பு

Must read

பர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக்  மதுரையில் தனது முதல் ஸ்டோரை தொடங்கியுள்ளது. ராயல்ஓக் அதன் சர்வதேச அளவிலான சோஃபாக்கள், சாப்பாடு மேசைகள், மெத்தை, படுக்கைகள், அலங்காரம் மற்றும் பரந்த அளவிலான அலுவலகம் மற்றும் வெளிப்புற பர்னிச்சர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. எண் ஜி2, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் எதிரில், மதுரை – 625007 என்ற முகவரியில் புதிய ஸ்டோர் அமைந்துள்ளது. திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக இந்திய சினிமா நடிகை ஜனனி கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். கெளரவ விருந்தினர்களாக  சுப.வெங்கடேசன், எம்.பி., , தலைவர், வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ராயல்ஓக் தலைவர்  விஜய் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஹெட் பிரான்சைஸ்  கிரண் சாப்ரியா, ராயல் ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட். லிமிடெட் நிர்வாக இயக்குனர் மதன் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு ஹெட் பிரான்சைஸ் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் ராயல்ஓக்கின் தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில், “ராயல்ஓக்கில் நாங்கள் எங்கள் முதன்மையான பிராண்ட் ஸ்டோரை திறப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இது எங்கள் பிராண்ட் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளின் உணர்வை வழங்குவதையும், சர்வதேச பர்னிச்சர்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு வகையான அனுபவங்களை வழங்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் பல கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் ராயல் ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஹெட் பிரான்சைஸ்,  கிரண் சப்பாரியா பேசுகையில், “அனுபவ ஷாப்பிங் எங்கள் நோக்கம் ஆகும். எங்கள் ஸ்டோர் ஒரு பிராண்ட் அனுபவத்தை கொடுக்க கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் பிராண்ட் அனுபவத்தை அதிகரிக்க முடிந்த அனைத்தையும் செய்வோம், மேலும் வாடிக்கையாளர் தொடர்புகளை நாங்கள் மதிப்பதால், இந்த ஸ்டோர் அதை எளிதாக்கும் என்பதில் உறுதியாக உள்ளளோம்” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “ஒரு பெரிய கேன்வாஸில் செயல்படுவதால், நிறுவனம் வளர அதிக இடம் இருக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்கும். வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுதும் சிறந்த சர்வதேச பர்னிச்சர்களை நம்பமுடியாத விலையில் வழங்குவதற்கு நிறுவனம் உறுதியளிக்கிறது. ஸ்டோர் ஊழியர்கள், தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை நன்கு அறிந்தவர்களாவர். எனவே கடை அனுபவத்தை நேசத்துக்குரியதாக மாற்றுகிறது, என்றார்.

நிறுவனம் இப்போது 10,000 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரச்சாமான்களின் பல்வேறு கட்டமைப்புகளை இறக்குமதி செய்கிறது. 131க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது மற்றும் 20 மூலோபய கிடங்கு வசதிகளை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, அஸ்ஸாம் மற்றும் பல இடங்களில் ராயல்ஓக் கொண்டுள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article