IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சினிமாவை மிஞ்சும் பழிக்குப் பழி சம்பவம்! ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்!

12

பிரபல ரவுடியை 4 பேர் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். வெட்டுக்குப் பயந்து வங்கிக்குள் நுழைந்த ரவுடியை விரட்டிச் சென்ற கும்பலை வங்கிக் காவலர் துப்பாக்கியால் சுட்டி விரட்டியடித்தார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த மே மாதம் 26ம்தேதி அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணனை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் பரமக்குடி மணி ஐயப்பன், ஆவரங்காட்டை சேர்ந்த தங்கராசு, வேலூர் பழனி குமார், திருப்புவனம் புத்தூர் பாலாஜி மற்றும் தங்கமணி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கில் தங்கமணி ஜாமினில் வெளியே வந்தார். இவர் நேற்று பகல் நேரத்தில் நண்பர்களுடன் பைக்கில் மானமதுரை மரக்கடை அருகே வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிராக 2 பைக்கில் 4 பேர் ஹெல்மேட் அணிந்து வந்து வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தங்கமணி தப்பித்து அருகில் இருந்த வங்கிக்குள் நுழைந்தார்.


எப்ப பார்த்தாலும் செல்போன் அம்மா கண்டித்ததால் தற்கொலை செய்த மகள்


வங்கிக்கு உள்ளேயும் அந்த கும்பல் சென்று தங்கமணியை தாக்கியுள்ளது. அப்போது அங்கு காவலுக்கு இருந்த வங்கி காவலரும், முன்னாள் ராணுவ வீரருமான செல்லநேரு, தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கிச் சுட்டார். இதில் திருப்பாச்சேத்தி பிச்சப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வம் என்பவரின் முழங்காலில் குண்டு பாய்ந்தது. இதனை பார்த்து மற்றவர்கள் தப்பித்து ஓடினர். இந்த சம்பவத்தால் வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர்.


இதையடுத்து இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த தங்கமணியை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காலில் குண்டு பாய்ந்த தமிழ்செல்வத்தை மானமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் இந்த தாக்குதல் குறித்துக் கூறுகையில், தாகுதலில் ஈடுபட்ட கும்பலையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டடிப்பட்ட தமிழ்செல்வத்திடம் விசாரணை செய்தபோது அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணாவை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தங்கமனியை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என தாக்குதல் நடந்ததும் தெரிய வந்துள்ளது என்றனர்.

#murder #crime #madurai #sivagangai