IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இப்படியும் ஒரு கொடூரம்! மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொலையாளிகள்!

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையில் பிரபல ரவுடியை வீட்டிற்குள் புகுந்து வெட்டிச் சாய்த்த கும்பல், மண்டையைப் பிளந்து மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அரிவாள் எடுத்தவனுக்கு அரிவாளால் சாவு

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவரது மகன் ஹரி என்ற அறிவழகன் (வயது 24). இவர் வேலைக்கு செல்லமால் ரவுடியிசம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அறிவழகன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தது. அறிவழகனின் வீடு சிறியதாக இருந்ததால் அவரால் தப்பிக்க முடியவில்லை.


வீட்டிற்குள் நுழைந்த கும்பல் அவரை திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத கும்பல், அறிவழகனின் மண்டையைப் பிளந்து, மூளையை வெளியே எடுத்து தட்டில் வைத்து ரசித்துள்ளது.


இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் அறிவழகன் வீட்டை நோக்கி வந்துள்ளனர். இதையடுத்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அறிவழகன் வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் அறிவழகன் இறந்து கிடப்பதையும், மண்டை உடைக்கப் பட்டு, மூளை எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மூளையை அங்கேயே ஒரு தட்டில் வைத்திருந்தது அவர்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது.


இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். போலீசார் அறிவழகனின் உடலை கைப்பற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்தது ஏன்? மாணவரின் உருக்கமான கடிதம் சிக்கியது

போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலைசெய்யும் நோக்கத்துடன் அறிவழகன் வீட்டுக்கு வந்த கொலையாளிகள், அறிவழகனைக் கொலை செய்ததோடு விட்டு விடாமல், அவரது மண்டையை பிளந்து மூளையை வெளியே எடுத்து வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இதனால் இந்த கொலை பழிக்குப் பழியாக நடந்திருக்கலாம் என்றும் கொலையாளிகள் கடுமையான ஆக்ரோஷத்துடன் இருந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#murder #rowdy #chennai #crime

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader