IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரவுடியை வழிமறித்து ஆசிட் வீசிய மர்ம நபர்கள்!

13

கொலை வழக்கு மற்றும் பல வழக்குகளில் சிக்கிய ரவுடி மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி உள்ளனர். அந்த மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரை மாவட்டம் அனுப்பானடியை சேர்ந்தவர் பிச்சை மகன் செந்தில்குமார் (வயது 26). இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு தெப்பக்குளம் பகுதியில் நடந்த கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. நேற்று காலை செந்தில்குமார் மற்றும் வினோத் இருவரும் பைக்கில் மதுரையில் இருந்து திருமங்கலம் சென்றுள்ளனர்.


கப்பலூர் டோல்கேட் அருகே செல்லும்போது, எதிராக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் செந்தில்குமார் மேல் ஆசிட்டை வீசினர். இதனால் செந்தில்குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக செந்தில்குமாரை, வினோத் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.


இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த போலீசார் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த வினோத் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.


செந்தில்குமாரை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறனர். அந்த மர்ம நபர்கள் யார்? என்று தேடி வருகின்றனர்.

#rowdy #acid #madurai #accident