IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

108 அவசர கால ஆம்புலன்சை நடிகை ரோஜா ஓட்டிச் சென்றதால் பரபரப்பு

Get real time updates directly on you device, subscribe now.

ஆந்திராவில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த நடிகையும் எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா ஆம்புலன்சை சிறிது தூரம் ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக 108 என்ற எண் கொண்ட புதிய அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகரி தொகுதி ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கலந்து கொண்டு தேங்காய் உடைத்து பூஜை செய்து புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.

அப்போது ரோஜா ஆம்புலன்சை தானே சிறிது தூரம் ஓட்டிச்சென்றார். ஆம்புலன்சை ரோஜா ஓட்டிச் செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

நடிகை ரோஜாவின் இத்தகைய செயலால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் பல மணிநேரம் காத்திருந்தன. மேலும் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader