IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வெள்ளி நாணயம்

413

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் உருவம் பொறித்த 20 பிராங்க் வெள்ளி நாணயத்தை (இந்திய மதிப்பில் 1,500 ரூபாய்) அந்நாட்டு அரசு வெளியிட்டு கௌரவித்துள்ளது.

தலையில் பட்டை அணிந்த நிலையில் பேக்ஹேண்ட் ஷாட் ஆடுவது போன்ற பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கிறது.
இது மொத்தம் 55 ஆயிரம் நாணயங்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாணய விற்பனைக்கான முன்பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.

முன்பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 23-ந் தேதி முதல் இந்த நாணயம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் இருக்கும் ஒருவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் நாணயம் வெளியிடப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.

பெடரர் உருவப்படத்துடன் வேறொரு வடிவில் 50 பிராங்க் தங்க நாணயம் அடுத்த ஆண்டு (2020) மே மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட்ஸ் ஸலாம் பட்டம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.