IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

செம்ம டேலண்ட்! கொள்ளையடித்த பொருட்களை வைத்து கடை விரித்த பலே கொள்ளையர்கள்!

26

கொள்ளையடித்த பொருட்களை குறைந்த விலை நிறைந்த தரம் என கொள்ளையர்கள் விற்று வந்துள்ளனர். அந்த கும்பலை விசாரித்த போது அவர்கள் காட்டிய கை வரிசை வெளியே தெரிய வந்தது.


வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி கோட்டை, நீலிக்கொல்லை மற்றும் சென்னாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளில் திருட்டு நடந்தன. வீட்டில் இருக்கும் நகை, பணம் போன்ற எல்லாவற்றையும் மர்ம கும்பல் கொள்ளை அடித்து கொண்டிருந்தன. இது குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


எப்ப பார்த்தாலும் செல்போன்

இந்நிலையில் வாணியம்பாடி நியூ டவுன் மேம்பாலம் அருகில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பைக்குகளில் நான்கு பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போலீசிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Related Posts
1 of 15


சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை செய்த போது சென்னாம்பேட்டையைச் சேர்ந்த நஸீர்பாஷா (58) மற்றும் அவரது மகன் நவீத் (24), மில்லத் நகரைச் சேர்ந்த சிக்கந்தர் (24), வசீம் (19) ஆகியோர் என்பதும், நான்கு பேரும் சேர்ந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்ததாக ஒப்புக்கொண்டனர்.


அதன் பிறகு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் அனைத்தையும் ஒப்புகொண்டனர். பகல் முழுவதும் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள், பணம் உட்பட கையில் கிடைக்கும் எல்லா பொருள்களை திருடுவார்கள். அவ்வாறு திருடும் நகைகளை பல அடகுக் கடைகளில் அடகு வைத்துள்ளனர். வீட்டில் இருக்கும் டி.வி. மிக்சி போன்ற மின்சாதனப் பொருள்களை ரோட்டில் கூவிக் கூவி குறைந்த விலையில் விற்று வந்துள்ளனர்.

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் மனமுடைந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை

அப்படி கிடைக்கும் பணத்தில் மது அருந்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் 4 பேரில் நஸீர்பாஷாவும், அவரது மகன் நவீத்தும் இந்த கும்பலின் தலைவர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் எந்த விதமான பூட்டாக இருந்தாலும் எளிதாகத் திறந்துவிடுவார்களாம். இவர்கள்தான் வாணியம்பாடியில் சமீபத்தில் மூன்று வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். வேலூர் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற மேலும் பல கொள்ளைச் சம்பவங்களிலும் இந்த நான்கு பேருக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்த விசாரணையில் தெரிந்தது.


இதனால் போலீசார் இவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 பவுன் நகைகள், 3 பைக்குகள் மற்றும் 2 எல்.இ.டி டிவியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
#robbery #crime #father #son