IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பெண் புலிக்காக சண்டையிடும் இரண்டு ஆண் புலிகள் – வைரல் வீடியோ

0 44

இந்திய வனப்பகுதி ஒன்றில் பெண் புலியுடன் இனச்சேர்க்கைக்காக இரண்டு ஆண் புலிகள் சண்டையிட்ட வீடியோ ஒன்று காமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். இந்த வார்த்தை மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்கிற்கும் கூட என்பதை நிரூபித்துள்ளது இந்த நிகழ்வு. பெண் என்றவுடனே அவருக்காக இரு ஆண்கள் சண்டையிடும் நிகழ்வுகள் நாம் தினம்தோறும் செய்தித்தாள் மற்றும் இணையதளங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது ஒரு பெண் புலிக்காக இரண்டு ஆண் புலிகள் சண்டையிடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய வனப்பகுதி ஒன்றில் புலிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சிலர், திடீரென அங்கிருந்த புலி ஒன்று மற்றொரு புலியுடன் சண்டையிடுவதைக் கண்டு தங்களது கேமராவில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர்.

அந்தப் புலிகள் மனிதர்களைப் போல இரண்டு கால்களில் நின்று பயங்கர சத்தத்துடன் உறுமியவாறு சண்டையிட்டன. இரண்டு கால்களை தூக்கிக் கொண்டு அறைவது போல் சண்டையிடும் காட்சி காண்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

இறுதியில் வெற்றி பெற்ற ஆண் புலி அந்த பெண்புலியுடன் உற்சாக சந்தோஷத்துடன் ஒன்று சேர்ந்தது. அந்த இரண்டு ஆண் புலிகளையும் கவர்ந்த பெண் புலியின் பெயர் நூர் என்று வனத்துறை அலுவலர் தெரிவித்தார். இந்த சம்பவம் இந்தியாவில் ராஜஸ்தானிலுள்ள Ranthambore தேசிய பூங்காவில் நடந்துள்ளது.