IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரிசி பருப்பு சாதம்

106


தேவையான பொருட்கள் :


அரிசி – ஒன்றரை கப், துவரம் பருப்பு – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 2, கொத்தமல்லி இலை சிறிதளவு, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – 4, காய்ந்த மிளகாய் – 2, பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன்.


செய்முறை :

  • அரிசி, பருப்பை நன்றாக கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.

  • தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

  • பூண்டை ஒன்றும் பாதியாக தட்டி வைக்கவும்.

  • குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றி கடுகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்தபின் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

  • அடுத்து மஞ்சள் தூள் போட்டு சிறிது வதக்கிய பின்னர் தக்காளியை சேர்க்கவும். 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

  • அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு அரிசியை போட்டு 2 நிமிடம் கிளறிய பிறகு கொத்தமல்லி தழை, 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வக்கவும்.

  • 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

  • இந்த அரிசி பருப்பு சாதத்தை அப்பளம், உருளைக்கிழங்கு பொரியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


#Rice #Dhal #Satham