IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சபல வருமானத்துறை அதிகாரியிடம் பணம், நகைகளை பறித்துச் சென்ற விலைமாது

Get real time updates directly on you device, subscribe now.


சென்னை கோயம்பேடு விடுதியில் ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரியிடம் நகை செல்போன் பணத்தை பறித்துச் சென்ற விபச்சார அழகியை போலீசார் தேடி வருகின்றனர்.

வருவாய்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 59 வயதான நபர் கிண்டியைச் சேர்ந்தவர். அவர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு

சென்றுள்ளார். அங்கு ஒரு விபச்சார அழகியை பார்த்துள்ளார். அவரை பார்த்த உடனே சபலத்தால் அவரிடம் போய் ரேட் பேசி உல்லாசமாக இருப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பிறகு இருவரும் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தனர். காலை பொழுது விடிந்தவுடன் கண் விழித்து பார்த்த அதிகாரிக்கு தன்னுடன் இருந்த அழகியை காணவில்லை என்பதை அறிந்த அவருக்கு முதல் அதிர்ச்சி. அடுத்துதான் அவருக்கு நிலவரம் புரிய ஆரம்பித்தது.

தன்னுடைய 5 பவுன் தங்க சங்கிலி, 3 தங்க மோதிரங்கள், ரூ.5 ஆயிரம், 2 செல்போன் ஆகியவற்றை அவர் இரவில் கழற்றி வைத்திருந்த சட்டை பேண்ட் என எதுவும் அறையில் இல்லை.

அவர் நன்றாக தூங்கியதை அறிந்த அழகி, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவரை அம்போ வென விட்டுவிட்டு அறையை விட்டு அழகி ஓட்டம் பிடித்துள்ளார் என்பதை அறிந்துள்ளார்.

வெறும் உள்ளாடையுடன் அறையை விட்டு வெளியே வரமுடியாத பரிதாப நிலையில் அதிகாரி இருந்துள்ளார். உடனே விடுதி ஊழியரை அழைத்துப்பேசி புதிய ஆடைகளை வாங்கி வரச்சொல்லி அணிந்து கொண்டு, நேராக கிண்டி போலீஸ் நிலையம் சென்றார்.

அங்கே ஏற்கனவே தனக்கு அறிமுகமான அதிகாரியை நாடி விவரத்தை சொல்லினார். ஆனால் அவர்களோ சம்பவ இடம் தங்கள் எல்லையில் இல்லை என்றும் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி, கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் தான் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினர்.

அதனையடுத்து கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் தங்கியிருந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த அழகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அதிகாரி காலையில் எழுந்ததும் தன்னைப் பற்றி புகார் அளிக்கவோ அல்லது கண்டுபிடிப்பதற்காக தேடி வரவோ கூடாது என்பதற்காகத்தான் அவரது உடைகளைக்கூட அந்த அழகி எடுத்துச் சென்றுவிட்டார் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Koyambedu #Chennai #RevenueOfficer #In4Net

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More