IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சில்லறை விற்பனையாளர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்க சம்மேளனம் கோரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தமிழ்நாடு அத்தியாயம் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற இடங்களில் உள்ள சுகாதார அதிகாரிகளால் சில்லறை விற்பனையாளர்களை துன்புறுத்தப்படுவதை நிறுத்துமாறு மாநிலஅரசிடம் முறையிட முடிவு செய்துள்ளாது.


இந்திய சில்லறை விற்பனையாளர் சங்க சம்மேளனத்தின் (FRAI) தமிழக அத்தியாயத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் சென்னை புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் நூற்றுக்கணக்கான சில்லறை வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்திய சில்லறை விற்பனையாளர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினர் (FRAI இந்த விவகாரத்தை விளக்கும் வகை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்க சம்மேளனத்தின் உறுப்பினரும், புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான சி.செல்லதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:


நாங்கள், சென்னையில் தினசரி தேவைப்படும் பொருட்களை விற்கும் 50,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் ஒரு பிரதிநிதித்துவ அமைப்பாவோம். சம்மேளனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் 34 சில்லறை விற்பனையாளர் சங்கங்களுடன், நாடு முழுவதும் நான்கு கோடி நுண், சிறு மற்றும் நடுத்தர சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட அகில இந்திய பிரதிநிதித்துவ அமைப்பான நாங்கள் FRAI-ன் உறுப்பினராக உள்ளோம்.


FRAI தமிழ்நாடு அத்தியாயத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் புழல் வட்டார வியாபாரிகள் சங்கம், சென்னை, இன்று மாநில அரசாங்கத்தின் சுகாதார அதிகாரிகளிடமிருந்து அதன் உறுப்பினர் கடைக்காரர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கு எதிராக தனது கவலைகளை தெரிவித்துள்ளது. இந்த சுகாதார அதிகாரிகள் சிறு சில்லறை விற்பனையாளர்களிடம் அடிக்கடி சென்று அவர்கள் புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களை பின்பற்றவில்லை என்று கூறுகிறார்கள். எங்கள் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் ஆவார்கள். ‘சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரப்படுத்தலுக்கான தடை மற்றும் வர்த்தகம் மற்றும் வணிகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தின் ஒழுங்குமுறை) சட்டம்’, 2003 அல்லது COTPA எனும் சட்டத்தின் மீறல் என்ற பெயரியல் இந்த எளிய, ஆதரவற்ற மக்களுக்கு சலான்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த சலான்கள் முற்றிலும் அடிப்படையான காரணமற்றவை ஆகும்.



கடைக்காரர்கள் எப்போதுமே முறையீடுகளின் வாதத்திற்கு இடமற்ற மற்றும் காரணமற்ற நிராகரிப்புகளால் கஷ்டப்படுகின்றனர். இந்த அதிகாரிகள் அவர்களின் நியாயமான வாதங்கள் எதையும் ஏற்பதில்லை. சுகாதார அதிகாரிகள் வறுமையிலிருக்கும் சில்லறை விற்பனையாளர்களை துன்புறுத்துவதையும், சட்ட விரோதமாக சலான் வழங்குவதையும் மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. எங்களுக்குள்ள மோசமான நிதிநிலையில், நாங்கள் செய்யாத குற்றங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எவ்வாறு எதிர்பார்க்கிறார்கள்? மேலும், சலான்கள் சட்டத்திற்கு உட்பட்டு தரப்படுவதில்லை, ஏனெனில் எங்கள் உறுப்பினர்கள் மேல் விதிக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பொது இடங்களில் புகைபிடித்தல் (பிரிவு 4) மீதானவையாகும், அது அவர்கள் புகைபிடிக்காதவர்களாக இருந்தாலும்கூட! நாங்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தால், எங்களை கைது செய்வதாக அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். இந்த துன்புறுத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது, விரைவில் நாங்கள் எங்கள் கடைகளை மூட வேண்டியிருக்கும்.


தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மாநில அரசாங்கத்திடமும் அதிகாரபூர்வ துன்புறுத்தல்களிலிருந்து வறுமையிலுள்ள மற்றும் ஆதரவவற்ற கடைக்காரர்களை காப்பாற்ற ஒரு உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டு ஒரு வலுவான முறையீடு செய்துள்ளது. இது துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப் படாவிட்டால், சென்னையிலுள்ள 50,000 குடும்பங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் வாழ்வா சாவா நிலைக்கு தள்ளப்படக் கூடிய விவகாரமாகும்.

இவ்வாறு புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவர்
சி.செல்லதுரை கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader