இருமல் மூலம் கொரோனாவை கண்டறியும் புதிய ஆப்ஸ் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு சரியாகி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப சிலகாலம் ஆகலாம் என்றே தெரியவருகிறது. ஆனால் கொரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என சோதனை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மசாசூட்ஸ் எனும் தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களின் இருமலை ஆய்வு செய்து கொரோனா பாதிப்பு உள்ளதா என தெரிவிக்கும் செயலியை உருவாக்கி உள்ளனர்.

கொரோனா வைரஸை இருமல் மூலம் கண்டறியும் புதிய ஆப்ஸ் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பல்வேறு ஆன்லைன் தகவல்களின் படி, ஆராய்ச்சியாளர்களின் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களிடம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை செயலி கண்டறிந்து தெரிவிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா தொற்று ஏற்பட்ட 70 ஆயிரம் பேரின் இருமல் சத்தங்களை ஆய்வு செய்தனர். பின் 2 லட்சம் இருமல் பதிவுகளை ஆய்வு செய்து 2500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தது. இந்த ஆய்வில் செயலி மூலம் 98.5 சதவீதம் சரியாக முடிவுகளை தெரிவித்து உள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader