10.1 C
Munich
Monday, October 3, 2022

ரீநியூபையின் “ஸ்மார்ட் டெக், ரைட் அட்வைஸ்” பிரச்சாரம்

Must read

இந்தியாவின் முன்னணி இன்சூர் டெக் நிறுவங்களில் ஒன்றான ரீநியூபை ஆனது “ஸ்மார்ட் டெக், ரைட் அட்வைஸ்” பிராண்ட் முன்மொழிவுடன் தனது முதல் 360-டிகிரீ விளம்பர பிரச்சாரத்தை நிறுவியது. இந்த நிறுவனம் பிரபலமான சினிமா நடிகரான ராஜ்குமார் ராவை அதன் பிராண்ட் தூதாரக நியமிக்கிறது. இந்த விளம்பர பிரச்சாரமானது அதன் டிஜிட்டல் லீட் காப்பீடு பிஓஎஸ்பி ஆலோசகர் நெட்வொர்க் மூலம் நுகர்வோரின் காப்பீட்டு தேவைகளை நிவர்த்தி செய்யும் பிராண்டின் வாக்குறுதியை எடுத்துக்காட்டுகிறது.  ரீநியூபையின் வலிமையான நாடுதழுவிய டிஜிட்டல் நெட்வொர்க்கின் பிஓஎஸ்பி காப்பீடு ஆலோசகர்கள் ஆதரவுடன், நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இருந்தும் டிஜிட்டல் முறையில் காப்பீடுகளை பெறலாம். நுகர்வோர்கள் எப்போதும் நேரடியாக காப்பீட்டை வாங்க முடியும் என்றாலும், மனித தொடர்பு இன்னும் தேவை என்பதை அனுபவம் காட்டுகிறது. டிஜிட்டல் லீட் காப்பீடு ஆலோசகர்கள் எந்த கிளை அலுவலங்களும் இல்லாமல் சிறிய மாவட்டங்களுக்கு சென்று காப்பீட்டு ஆதரவுடன் நுகர்வோர்களுக்கு உதவ முடியும்.

பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசிய ரீநியூபையின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான, தேவேஷ் ஜோஷி, “எங்கள் தேசியளவிலான 360-டிகிரீ பிரச்சாரத்தின் மூலம், 2ஆம் கட்ட நகரங்கள் மற்றும் அதையும் தாண்டி கவனம் செலுத்தி 700 மில்லியன் நுகர்வோர்களை இலக்காக நிர்ணத்துள்ளோம். இந்த பிரச்சாரம் ஊடக தலைமையிலான நுகர்வோர் தொடர்பு நிகழ்ச்சி, இது எங்களின் பிராண்ட் வாக்குறுதியான “ஸ்மார்ட் டெக், ரைட் அட்வைஸ்” உணமையாக்கும். நாடு முழுவதும் நுகர்வோரை தொடர்புகொள்ள, தொலைகாட்சி, பிரிண்ட், வானொலி, ஓஓஎச் மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றில் ஒருங்கிணைத்து வருகிறோம். தேசிய ஊடக தொடர்பு ஆனது பெரிய பங்குதாரர் பெரும் நோக்கத்துடன் நுகர்வோருடன் வலுவான உறவை குறிப்பாக 2ஆம் கட்ட நகரங்களில் உருவாக்க உதவும். மேலும், ராஜ்குமார் ராவை பிராண்ட் தூதரக நியமித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் ” எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய, ராஜ்குமார் ராவ் கூறியதாவது, “இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் இன்சூர் டெக் தளமான ரீநியூபை போன்ற நிறுவனத்துடன் இணைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரீநியூபையின் டிஜிட்டல் தளமானது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டு தயாரிப்புகளை எடுத்து செல்ல உதவும் என்று நான் நம்புகிறேன். அவர்களுடன் நான் இணைத்திருப்பதில் பெருமை அடைகிறேன் மேலும் அவர்கள் கதையை உலகம் அறியும் வரை காத்திருக்க முடியாது” என்று கூறினார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article