IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க

249

 

அனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதுமானது.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில், 15 நிமிடம் நன்றாக தேய்க்க வேண்டும். பின் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கும்.

வெந்தையக்கீரை :

வெந்தயக் கீரையை, நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

Related Posts
1 of 3

எழுமிச்சை சாறு :

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும், இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் சீக்கிரம் மறைந்துவிடும்.

தக்காளி :

தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

#remove #face #black #mark #tips