மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம்

Get real time updates directly on you device, subscribe now.

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான மாமன்னர் மருது பாண்டிய சகோதரர்களின் (பெரியமருது, சின்னமருது) 219ம் ஆண்டு நினைவு தினமான இன்று (அக்டோபர் 24) இன்று அனுசரிக்கப்படுகிறது.

மருது பாண்டியர்களின் குருபூஜை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏக்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ். சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

மருது பாண்டிய சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு முதல்வர் பழனிச்சாமி டுவிட்டரில் புகழாரம் செலுத்தியுள்ளார். தமிழ் சொந்தங்களுக்கு விடுதலை வேட்கையை விதைத்து, நம் தாய்த் திருநாட்டிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரையிலான காலக்கட்டத்தில் போராடிய மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு தினத்தில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும், வணங்கி போற்றுகிறேன்.

தேசத்தின் அனைத்து குழுக்களையும் ஒன்றாக இணைக்க முயற்சித்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடைசிவரை போராடி, தங்கள் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன்களான பெரிய மருது, சின்ன மருது எனும் மருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More