IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் நள்ளிரவு முதல் பொது முடக்கத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை – ஆர்.பி.உதயகுமார்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் பொதுமுடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலில் கடந்த 2 வாரங்களாக மதுரையில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. இன்று மதுரையில் மேலும் 320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6077ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1803ஆக உள்ள நிலையில் 4163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் மதுரையில் பொதுமுடக்கத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்றுடன் அமலில் இருந்த பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் சில நாட்களுக்கு பொதுமுடக்கத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை விரிவுப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader