IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ரியல்மி சி11 ஸ்மார்ட் போன்

Get real time updates directly on you device, subscribe now.

பட்ஜெட் விலையில் ரியல்மி சி11 ஸ்மார்ட் போன் அடுத்த வாரம் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்டவற்றை இங்கு காண்போம்.

கடந்த மாதம் ரியல்மி சி11 மொபைல் அறிமுகம் செய்யப்பட்டது. இரட்டை கேமரா, 5,000 ஆம்ப் பேட்டரி பவர் திறன் இதன் முக்கிய அம்சங்கள்.

வெர்ட்டிகல் ஸ்ட்ரைப்புடன் புத்தம் புதிய பேனலில் சி 11 வெளியாகிறது. இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூ டியூப் ஆகிய சமூக வலைதளங்களில் ஜூலை 14ம்தேதி ரியல்மி சி 11 மொபைல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த போன் மலேசியாவில் அறிவிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Genuine Indian Payment Gateway

மின்ட் கிரீன், பெப்பர் கிரே கலர்களில் போன் கிடைக்கிறது. இதன் விலையை பொருத்தளவில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போன் ரூ. 7,500க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை நானோ சிம், ஆண்ட்ராய்டு 10, ரியல்மி யு.ஐ., 6.5 இன்ச் எச்.டி. டிஸ்ப்ளே, ஆக்டேன் கோர், மீடியா டெக் ஹலோ ஜி35 எஸ்.ஓ.சி., 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. இன்பீல்டு மெமரி, 13 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளிட்டவை இதன் கவனிக்கத்தக்க அம்சங்கள்.

3.5 எம்.எம். ஜேக் ஆடியோ இன்புட் கொண்ட இந்த மொபைல் 5,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 32 மணி நேரம் பேசலாம் என ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader