IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அந்நிய செலவாணிக்காக அமெரிக்க டாலரை கையகப்படுத்தும் ஆர்.பி.ஐ.

19


ரிசர்வ் வங்கி தொடர்ந்து அமெரிக்க டாலரை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறது. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மூன்று மாதங்களிலும் தொடர்ந்து ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களை வாங்கி குவித்துள்ளது.


2018 டிசம்பர் மாதத்தில் 607 மில்லியன் டாலரை வாங்கியிருந்த ரிசர்வ் வங்கி 2019 ஜனவரியில் 293 மில்லியன் டாலரை வாங்கியுள்ளது. இது பிப்ரவரியில் மேலும் அதிகரித்து 825 மில்லியன் டாலராக உள்ளது.


ரிசர்வ் வங்கி தனது ரிசர்வ் கையிருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள அமெரிக்க டாலரை சந்தையிலிருந்து வாங்கிவருகிறது. 2017-18 நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி மொத்தமாக வாங்கிய டாலரின் மதிப்பு 52.068 பில்லியன் டாலர் ஆகும்.


இதில் 18.379 பில்லியன் டாலரை மட்டுமே விற்றது. மிதமுள்ள 33.689 பில்லியன் டாலர் இருப்பில் வைக்கப்பட்டது. இதன் மூலம்தான் இந்தியாவின் டாலர் கையிருப்பு 426.028 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.


இதனடிப்படையில் தற்போது மீண்டும் ரிசர்வ் வங்கி டாலரை வாங்கிவருகிறது. ஜனவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி வாங்கிய மொத்த டாலரின் மதிப்பு 1.025 பில்லியன் ஆகும்.


இதில் 732 மில்லியன் டாலரை மட்டுமே விற்றுள்ளது. மீதமுள்ள 293 மில்லியன் டாலரை இருப்பில் வைத்துக்கொண்டது. அதேபோல் பிப்ரவரி மாதத்தில் 2.086 பில்லியன் டாலரை வாங்கி, அதில் 1.261 பில்லியன் டாலரை மட்டுமே விற்று, மீதமுள்ள 825 டாலரை இருப்பில் வைத்துள்ளது.


ஏப்ரல் 5-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் மொத்த டாலர் இருப்பு 386.11 பில்லியன் டாலராக உள்ளது.