IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதம் நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதகாலம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரிப்பால் நாடு முழுவதும் 2 மாத ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது.

உற்பத்தி நடவடிக்கை 21% குறைந்துள்ளது. மின்சாரம், பெட்ரோலிய தயாரிப்பு நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. தனியார் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது. 2020-21 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும். அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் பெருமளவுக்கு குறைந்துள்ளது.

ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரி செய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader