IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமுகன் கைது!

Get real time updates directly on you device, subscribe now.


நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து துன்புறுத்தி கொலை செய்த காமுகன் கைது செய்யப்பட்டான்.


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பவானி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள். தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக தனது 2 குழந்தைகளுடன் கொடுங்கையூரில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருந்ததால், பவானி ரமேஷை விட்டு பிரிந்து சென்றார்.


பின்னர் 4 மாதங்கள் கழித்து அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது புது கணவருடன் 2 குழந்தைகளுடன் புழல் கண்ணப்பசாமி நகரில் வசித்து வந்தார்.


இந்நிலையில் திடீரென பவானியின் மகள் யாழினி (வயது 4) மூச்சு விடவே சிரமப் பட்டாள். இதையடுத்து சிறுமியை பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறினர். இதனால் தாய் பவானி அதிர்ச்சியில் உரைந்து போனாள். கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


மகள் இறந்த தகவல் அறிந்த முதல் கணவன் ரமேஷ் மருத்துவமணைக்கு விரைந்து வந்தார். தனது குழந்தையின் முதுகு, கழுத்து, மற்றும் வயிறு பகுதிகளில் காயங்கள் இருப்பதைப் பார்த்த ரமேஷ், சிறுமி யாழினி அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகித்தார். இதையடுத்து இதுகுறித்து ரமேஷ் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி யாழினி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

சொத்துக்காக இப்படியுமா செய்வாள் மனைவி?


மேலும் விசாரணையில் சிறுமி யாழினி உடலில் சிகரெட்டால் சூடு வைத்தது, கன்னம், அடிவயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்ததும் தெரிய வந்தது. மேலும் குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிப் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் இதனை ஒப்புக் கொண்டுள்ளான்.


இதையடுத்து ஆசிப் மீது, குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துவது மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


#Man #arrested #raping #four-year-old child

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader