IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

48 கிலோ கடல் பல்லி மற்றும் 1 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்

198

தொண்டி கடற்கரை பகுதியில் 48 கிலோ கடல் பல்லி மற்றும் 1 கிலோ கடல் குதிரைகளை சுங்க இலாகாவினா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசங்கலிமடம் கடற்கரை பகுதியில் கடல் குதிரை, கடல் பல்லி பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மற்றும் தொண்டி சுங்கத்துறையினருக்கு தெரியவந்தது.

Related Posts
1 of 8

இதையடுத்து சுங்கத்துறையினா் வீரசங்கலிமடம் கடற்கரை பகுதிக்குச் சென்று காட்டு கருவேல மரங்களுக்கிடையே சோதனையிட்டனா்.

அங்கு 6 மூட்டைகளில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 48 கிலோ கடல் பல்லி மற்றும் 1கிலோ கடல் குதிரை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும் அவற்றை பதுக்கி வைத்தவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.