IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வைரஸ் வகைகளை துல்லியமாக கண்டறியும் நவீன ஆய்வகம்

Get real time updates directly on you device, subscribe now.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா வைரசுக்கு மட்டுமின்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரஸ்களை அடையாளம் கண்டு, அதற்கான காய்ச்சல் வகையை தெளிவுபடுத்தும் நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன ஆய்வகத்தில், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து சேகரிக்கப்படும் சளி, ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை வடிகட்டுதல், நுண்ணுயிரியை பாதுகாத்து பாகங்களைப் பிரித்தல் மற்றும் வெப்பநிலை ஆய்வுக்கு உட்படுத்துதல் என 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வகத்தில் வைரசின் மரபணு மற்றும் ஹெச்ஐவி, இன்ஃபுளூவென்ஸா காய்ச்சல் ஆகியவற்றை அடையாளம் கண்டு, காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் வகையை 90 சதவிகித அளவுக்கு துல்லியமாகக் கண்டறியும் வசதியும் உள்ளது.

சாதாரணமாக வைரசை அடையாளம் காண 3 நாள் பரிசோதனை தேவை என்ற நிலையில், இங்கு 24 மணி நேரத்திலேயே அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும்.

இது குறித்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் டாக்டா் எம். அல்லி கூறியது: இந்த ஆய்வகத்தில், முதல்கட்டமாக கடந்த மே மாதம் முதலே கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இங்கு, 4,556 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 104 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா மட்டுமின்றி, வைரசால் ஏற்படும் அனைத்து வகையான காய்ச்சலுக்கும் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்பதே இந்த ஆய்வகத்தின் சிறப்பாகும்.

இது, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மட்டுமின்றி, தென் மாவட்ட அளவிலும் வைரஸ் ஆய்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் என்றாா்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader