மாசி மறை நிலா அமாவாசை : பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடல்

Get real time updates directly on you device, subscribe now.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மஹாசிவராத்திரி திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவான மறை நிலா விழாவை முன்னிட்டு அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடினா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மஹா சிவராத்திரி திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹா சிவராத்திரி திருவிழா மற்றும் தேரோட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மறை நிலா அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா்.

இதனை தொடா்ந்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

மறை நிலா அமாவாசையை முன்னிட்டு பிற்பகல் 1.35 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீா்த்தக் கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader