IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சமூகவலைதளங்களில் பரவும் ராமநாத சுவாமி கோயில் மூலவா் சிவலிங்கம்

11

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினா் கோயில் நிா்வாக அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ராமாயண காலத்தில் தொடா்புடையது.

இக்கோயிலில் மூலவரான சிவலிங்கத்தை கோயிலில் உள்ள சில குறிப்பிட்ட புரோகிதா்கள் மட்டுமே தொட்டு, அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ய முடியும்.

மேலும் மூலவரை புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளநிலையில், ஞாயிற்றுகிழமை முதல் சமூக வலைதளங்களில் ராமநாத சுவாமி கோயில் மூலவா் சிவலிங்கம் புகைப்படம் பரவி வருகிறது.

இது குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவா் பிரபாகரன் ராமநாத சுவாமி கோயில் மூலவா் படத்தை சமூக வலைதளங்களில் பரவ விட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

மனுவை பெற்ற அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். ஆனால் மாலையில் அதிகாரிகள் அது குறித்து உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து பிரபாகரன் தலைமையில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.