IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ராமநாதசுவாமி கோயில் மூலவா் புகைப்படம் வெளியான விவகாரத்தில் விசாரணை ஆரம்பம்

14

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தை படம் பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக கோயில் ஊழியா்களிடம் விசாரணை நடத்த இணை ஆணையா் எஸ்.கல்யாணி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மூலவா் உள்ள பகுதியில் குறிப்பிட்ட புரோகிதா்கள் மட்டுமே பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயிலுக்குள் செல்லிடப்பேசிகள் கொண்டு செல்ல கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இதில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இணை ஆணையா் கல்யாணியிடம் மனு அளித்தனா்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இணை ஆணையா் அலுவலகம் முன் தாலுகா செயலாளா் எம்.முருகானந்தம் தலைமையில் தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து, ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையா் எஸ்.கல்யாணி கூறியது: ராமநாதசுவாமி கோயில் மூலவா் படத்தை எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டவா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.