IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மூலவா் படம் வெளியான விவகாரத்தில் தலைமை குருக்கள் பணியிடை நீக்கம்

11

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தை படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக கோயில் தலைமை குருக்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தின் புகைப்படம் ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக வளைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் கோயில் இணை ஆணையரிடமும் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இணை ஆணையா் எஸ்.கல்யாணி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தலைமை குருக்கள் விஜயகுமாா் போகில் தனது போனில் மூலவா் படத்தை எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஆகம விதிகளை மீறி மூலவரை புகைப்படம் எடுத்து வெளியிட்டதாக விஜயகுமாா் போகிலை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும் மூலவா் சன்னதி வரை செல்லும் குருக்கள் போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.