அப்பா எடுத்த பிகினி போட்டோ குறித்து ராகுல் ப்ரீத்தி சிங்கின் இன்ஸ்டா பதிவு

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தவர் ராகுல் ப்ரீத்தி சிங். அதன் பிறகு தேவ் மற்றும் சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணியில் உள்ளார் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CHxbrKcBAbn/?utm_source=ig_web_copy_link

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் ப்ரீத்தி சிங் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். இங்கு ஏற்கனவே காஜல் அகர்வால் தனது கணவருடனும், வேதிகா மற்றும் ப்ரணிதா சுபாஷ் ஆகியோர் மாலத்தீவில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராகுலும் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றுள்ளார்.

https://www.instagram.com/p/CH0P144hLUj/

ஏற்கனவே ராகுல் தனது இன்ஸ்டா பதிவில் மாலத்தீவில் எடுக்கும் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதிலும் பச்சை நிற பிகினியுடனும் சகோதருடன் கவர்ச்சி உடையிலும், கடற்கரை மணலில் வில் போல் வளைந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/p/CH11DjihAdS/?utm_source=ig_web_copy_link

இந்த நிலையில் தற்போது ஆரஞ்சு நிற பிகினி உடை அணிந்து உட்கார்ந்து இருப்பது போல் உள்ள புகைப்படம் ஒன்றை ரகுல் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை தனது அப்பா தான் எடுத்தது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader