IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ராஜுவ் காந்தி கொலை – சீமானின் சர்ச்சை பேச்சிற்கு வக்காளத்து வாங்கும் திருமா!

Get real time updates directly on you device, subscribe now.

ராஜுவ் காந்தியின் கொலை குறித்து சீமான் பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவரது கருத்திற்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சி பொதுச்செயலாளர் சீமான் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை சம்பந்தமாக சில சர்ச்சை கருத்துகளை கூறினார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மூலம் சீமான் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜுவ் குறித்து சீமான் பேசிய கருத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, இந்திய அமைதிப்படை மீதான கோபம் நியாயமானது என்றாலும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை கூறுவது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது என்றார்.

மற்றும் ராஜுவ் காந்தியை கொன்றதாக விடுதலைப்புலிகள் ஒருபோதும் கூறியதில்லை. அவர் இந்திய அரசையோ அல்லது காங்கிரஸையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விமர்சனம் செய்ததில்லை என்றார். மேலும் அவர் இந்திய அரசை பகைத்துக் கொள்ளாத அணுகுமுறையைத் தான் பிரபாகரன் பின்பற்றியதாக திருமாளவளவன் கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader