IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காந்தியை சுட்டது சரி என்றால் ராஜுவ் காந்தியை கொன்றதும் சரிதான் – சீமான் சர்ச்சை பேச்சு

0 38

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை குறித்த சர்ச்சை பேச்சை திரும்பப் பெற போவதில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் மரணம் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும் சீமானுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்ட கோட்சே செய்தது சரிதான் என்றால் ராஜுவ் காந்தியை சுற்றுக் கொண்டதும் சரிதான் என்று சீமான் பேசியுள்ளார். ஒருகாலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும். என் இனத்தை இந்திய இராணுவம் எனும் அமைதிப்படை என்கிற அநியாயப்படையை அனுப்பி என இனமக்களை கொன்று குவித்த ராஜுவ் காந்தி என்கிற எதிரியை வெடிகுண்டு வைத்து கொன்றதும் சரிதான் என்று சீமான் பேசியுள்ளார்.

மேலும் சீமான் கூறியதைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டதால் போலீசாரும் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது வழக்கு பதிவு செய்வதற்கு எந்தவித உண்மையும் இல்லை. அப்படி வழக்கு செய்த எதையும் நான் எதிர்கொள்ள தயராக இருக்கிறேன். இதுபோல எத்தனையோ வழக்குகளை நான் பார்த்துவிட்டேன். ஆனால் ஒருபோதும் ராஜுவ் காந்தி பற்றிய கருத்தை ஒருபோதும் திரும்பப் போவதில்லை.

ராஜுவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை இலங்கையில் என்ன செய்தது என்று என்னுடன் விவாதிக்க தயாரா ? என்றும் இதே தமிழக சட்டசபையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பச்சைக் குத்திக் கொண்டு எனது தம்பிகள் சட்டசபைக்கு செல்லும் நாள் கூடிய விரைவில் ஏற்படும் என்று சீமான் பேசியுள்ளார்.