IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் இமயமலை பயணம் – ரிஷிகேஷில் சாமி தரிசனம்

0 78

தர்பார் படஷீட்டிங்கை முடித்துவிட்டு இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் நேற்று ரிஷிகேஷில் சுவாமி தரிசனம் செய்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படம் முடிந்தவுடன் இமயமலைக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் சில வருடங்களாக உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் இமயமலைக்கு செல்லவில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் இமயமலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தர்பார் பட ஷீட்டிங்கை முடித்துவிட்டு இமயமலை செல்ல திட்டமிட்டிருந்த ரஜினிகாந்த் நேற்று திடீரென குடும்பத்தினருடன் காலை 6.40 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து உத்திரகாண்ட் மாநிலம் இமயமலை அடிவாரமான டேராடூனுக்கு சென்றார். பிறகு அங்கிருந்து காரில் ரிஷிகேஷ் சென்றடைந்த அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். பிறகு கும்பத்தினருடன் ரிஷிகேஷிலேயே இரவு தங்கினார்.

கேதார்நாத் அருகே ஃபட்டா என்ற இடத்திற்கு இன்று காலை (அக்டோபர் 14) ரஜினிகாந்த் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். பிறகு ஹெலிகாப்டரிலேயே அங்குள்ள பகுதிகளை சுற்றிபார்க்கும் ரஜினிகாந்த், இன்று இரவு ஃபட்டாவிலேயே தங்குகிறார். நாளை (அக்டோபர் 15) ஃபட்டாவிலிருந்து புறப்பட்டு கேதார்நாத் புறப்பட்டு செல்கிறார்.

கேதார்நாத் செல்லும் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், கோவிலில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு நடத்தவும், ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் ரஜினிகாந்த், தான் கட்டிய துவாரஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
#Rajinikanth #In4Net #Himalaya #Rashikesh