IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரஜினிக்கு ஜோடியாகும் சிம்ரன் ?

0 4

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் என்று பல்வேறு யூகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அஞ்சலி, திரிஷா, நயன்தாரா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இதற்கிடையில் காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, என் மகள் வயது பெண்ணுடன் நடித்திருக்கக் கூடாது என்று கூறினார்.

எனவே கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர்.

ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது.

ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானநிலையில் பாபி சிம்ஹாவையும் நடிக்கவைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதேபோல் ஹீரோயின் ரோலில் நடிகை சிம்ரனை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சிம்ரன் அஜித், விஜய், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடு நடித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்துடன் நடித்ததில்லை. இதனால் நிச்சயம் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிந்ததும் இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.