IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

என்றைக்குமே நான், காவி சாயத்துக்குள் சிக்க மாட்டேன் – ரஜினிகாந்த்

0 51

ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசும் போது திருவள்ளுவரைப் போன்று எனக்கு காவி நிறம் பூச பாஜக முயற்சிக்கிறது என்று பேசினார்.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி, சித்தர், ஞானிகள், போன்றவர்களை மதம், ஜாதி போன்றவற்றிற்குள் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அப்பாற்பட்டவர்கள்.

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் எழுதிய குறல்கள் மூலம் அவரை உலகம் அறியும். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர். இதை யாரும் மறக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. இந்நிலையில் “திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியது போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. காவி சாயத்துக்கு திருவள்ளுவர் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன்” என கூறினார்.

மேலும் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தன்னை சந்திப்பது அரசியல் காரணத்திற்காக அல்ல.