IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

என்னாலயே அரசியல்ல ஜெயிக்க முடியல; உங்களால முடியுமா? ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி எச்சரிக்கை!!

Get real time updates directly on you device, subscribe now.


ரஜினி கமலுக்கு எல்லாம் அரசியல் சரிப்பட்டு வராது என்றும் அவர்கள் விலகிக் கொள்வது நல்லது என்று ஆந்திர நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.


தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இன்றைய கால அரசியல் உலகம் பணத்தை சுற்றியே சுழல்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தாலும் அவர்களால் செய்ய முடியாது. ஏனெனில் இன்றைய அரசியல் உலகம் அப்படி மாறி விட்டது.


திரை உலகில் நம்பர் 1 இடத்தை விட்டு மக்களுக்கு உதவி செய்ய நான் அரசியலில் நுழைந்தேன். ஆனால் எனது வெற்றியை முடிவு செய்த செல்வந்தர்கள், எனது சொந்தத் தொகுதியிலேயே என்னை தோற்கடிக்க கோடிக்கணக்கில் பணம் செலவிட்டனர். கமல் இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன். ஆனால் அது நடைபெற வில்லை.
நான் சுபஸ்ரீயின் ஆவி பேசுகிறேன் !


ஆனால் இன்றைய கால கட்டத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்காக பொறுமையுடன் அவமானங்களையும் இழப்புகளையும் எவர் தாங்கிக் கொள்கிறாரோ அவரால் மட்டுமே அரசியலில் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் என்னைப்போன்று சென்சிடிவ் ஆட்களால் அரசியலில் நிலைக்க முடியாது.


ரஜினி கமலுக்கு எனது ஒரே வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் அரசியலில் இருக்க வேண்டாம். உங்களுக்கான மரியாதைக்குரிய இடம் அல்ல. இருப்பினும் தோல்விகளை மீறி நல்லது செய்வதில்தான் ஆர்வம் கொண்டிருந்தால் அரசியலுக்கு வாருங்கள். ஒருநாள் உங்கள் கனவு நிச்சயம் வெல்லும் என்று ஆந்திர நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.
#Chiranjeevi #Rajinikanth #Kamalhassan #Warn #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader