IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திராவிட கட்சிகளுடன் மோத ரஜினி, கமலின் தேர்தல் வியூகம்

167


மக்களின் நலனுக்காக நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2020 சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை சமாளித்து இரண்டு திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எதிர்த்து போட்டியிட உள்ளனர். இந்நிலையில் ரஜினியும், கமலும் தனித்து போட்டியிட்டால் திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் பிரியும் என்றும் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

ரஜினியுடன் இணைய தயார் என்றும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இருவரும் இணைவோம் என்றனர். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க அவசியம் ஏற்பட்டால் பயணிப்போம் என்று கமல்ஹாசன் பேட்டியளித்திருந்தார்.

ரஜினிகாந்தும் கமல் கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா..? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று கூறினார். தற்போது இரண்டு திரையுலக ஜாம்பவான்களும் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என்று கூறியதால் திராவிட கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.