நட்பிற்காக ரஜினிகாந்த் தயாரித்து நடித்து கொடுத்த வெற்றி படம் அருணாச்சலம்

Get real time updates directly on you device, subscribe now.

‘ப்ரூஸ்டர்ஸ் மில்லியன்ஸ்’ என்ற ஆங்கில நாவலின் பதிப்பிலிருந்து ரஜினிகாந்த் உருவாக்கிய படம் அருணாச்சலம். சினிமா துறையில், பல்வேறு காலகட்டத்தில் தனக்கு உறுதுணையாக நட்பாக இருந்தவர்களுக்கு உதவுவதற்காக, ரஜினி தயாரித்து, நடித்துக் கொடுத்த படம்,

ரஜினியின் தந்தை வேதாச்சலம் மிகப் பெரிய கோடீஸ்வரர். தன் மகனுக்கு, பணத்தின் மீது ஆசை இருக்கக் கூடாது என்பதற்காக, 3 வித்தியாசமான நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். அதாவது, 30 நாட்களில், 30 கோடி ரூபாய் பணத்தை செலவழிக்க வேண்டும் என்பது தான், நிபந்தனை. இதில் ருசிகரமான விதிகளும் உள்ளன. அதில், ரஜினி எப்படி வெற்றி பெற்றார் என்பது தான், கலகலப்பான திரைக்கதை.

ரஜினிகாந்த் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக, சுந்தர்.சி, இக்கதையை ஏற்றுக்கொண்டார். நகைச்சுவை படம் என்பதால், கிரேஸி மோகன் தன் வசனங்களில் பட்டையை கிளப்பினார்.

ரஜினியின் அறிமுக காட்சி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தேவாவின் இசையில், ‘அல்லி அல்லி அனார்கலி, அதான்டா இதான்டா, மாத்தாடு மாத்தாடு, நகுமோ, சிங்கம் ஒன்று, தலை மகனே…’ என, அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காகவே, வைரமுத்து பாடல்கள் எழுதினார் என்று கூறலாம். தேர்தல் பிரசாரத்தில், ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்த மனோரமா, பட வாய்ப்பின்றி தவித்தார். ரஜினி அனைத்தையும் மறந்து,

இப்படத்தில் மனோரமாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். வடிவுக்கரசி, ஜனகராஜ், செந்தில், ரகுவரன் கதாபாத்திரங்கள், படத்தின் விறுவிறுப்புக்கு துணை புரிந்தன. இவையனைத்தும் ரஜினிகாந்த் ஒருவரால் மட்டுமே முடியும் என நிரூபித்த படம் அருணாச்சலம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More