IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ரஜினிகாந்தின் முதல்வர் ஆசையை பிஜேபியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் – எஸ்.வி.சேகர்

Get real time updates directly on you device, subscribe now.


பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே ரஜினிகாந்த் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ம் ஆண்டு சென்னையில் ரசிகர்கள் மத்தியில் கூறியிருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்சியின் பெயரே அறிவிக்கவில்லை என்பதே அனைவரின் கேள்விக்குறியாகும்.


சமீபத்தில் ஜெயம்ரவி நடித்த படம் ஒன்றில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்ற காட்சி பெரும் நகைச்சுவைக்கு உள்ளாகி பின்பு அந்த காட்சி சர்ச்சையானதால் படத்திலிருந்து நீக்கப்பட்டது.


இந்த நிலையில் ரஜினிகாந்த் 2021ல் மதுரையில் தனது கட்சி பெயரை அறிவிப்பேன் என்றும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடுவேன் என்று 234 தான் எனது அடுத்த இலக்கு என்றும் கூறி வருகிறார்.
பிஜேபிக்கு நான் சப்போர்ட்டா ! தலையில் அடித்துக் கொள்ளும் ரஜினிகாந்த்


ஆனால் அவருக்கு பின்னால் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனோ நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார். ஆனால் ரஜினிகாந்தோ இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என அவரது ரசிகர்கள் கவலைபடுகின்றனர்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91வது பிறந்தநாளை ஒட்டி இன்று மரியாதை செலுத்த சென்னை அடையாறுக்கு எஸ்.வி.சேகர் வந்தார். அவரது சிலைக்கு மாலை செலுத்தி விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


அப்போது பேசிய எஸ்.வி.சேகர், ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவது உறுதி. அவர் தேர்தலில் பங்கெடுப்பார். அவர் தமிழகத்தின் முதல்வராவார். யார் அதிக தொகுதி இடங்களை பெறுகிறாரோ அவரே தமிழக முதல்வராவார். ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
தமிழகத்தில் பாஜக தலைவராக ரஜினிகாந்த்


அவர் நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராவார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே ரஜினிகாந்த் தமிழக முதல்வராவார். தமிழகத்தில் தற்போது பாஜக தயவின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.


நேற்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிச்சாமி நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு அதிமுக விற்கு பாஜக கூட்டணி ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த், பாஜகவுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் மற்றும் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை என்மேல் இருப்பது என்னை மிகவும் வேதனைப் படுத்துவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Rajinikanth #SVSekar #BJP #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader