IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ரஜினியை காட்டி அஜித்திற்கு வலைவீசும் அதிமுக – ராஜேந்திர பாலாஜி

Get real time updates directly on you device, subscribe now.


நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்திருந்தால் முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி பேசும் போது, அதிமுக தொடர்கள் மீது தாக்குதல் நடத்துபவர் களைத்தான் தாக்குவோம் என்றுதான் கூறினேன். தவிர வன்முறையைத் தூண்டும் நோக்கில் கூறவில்லை என்றார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி முடிவை கட்சி மேலிடம் தான் எடுக்க வேண்டும். நடிகர் சிவாஜி கணேசன் பற்றி முதல்வர் கூறிய கருத்தை திரித்து கூறப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறிய கருத்து பொதுவான கருத்துதான். அவர் ஒரு ஆன்மீகவாதி. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதிசயம் எப்போது வேண்டுமனாலும் யார் வாழ்க்கையிலும் நடக்கலாம்.

அரசியலில் எது வேண்டுமனாலும் நடக்கலாம். பாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சியை ஆரம்பித்து இருந்தால் அவர் ஆட்சியை பிடித்திருப்பார். காலம் கடந்து விட்டது. இனி வரும் தேர்தல்களில் பணத்தை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது. மக்களின் ஆதரவு வேண்டும் என்றார்.

விஜய், ரஜினி, கமல் கூட்டணி அமைத்தால் கூட அவர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும். நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட பாஜக மாநில தலைவராக பதவியில் இருந்த தமிழிசை சௌந்திரராஜனும் அஜித்தை பாஜக கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் அஜித். தனது ரசிகர்கள் தனது பட ரிலீஸ் மற்றும் ரசிகர் மன்ற நற்பணி போன்றவற்றில் ஈடுபடுவதை விரும்பாத அஜித், தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார்.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் அஜித்தை அரசியலில் இழுக்க வலை வீசி வருகிறார் . ஆனால் எந்த கட்சியின் வலை வீச்சிலும் சிக்காத அஜித் அதிமுகவில் வலை வீச்சில் மட்டும் சிக்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
#Rajinikanth #AjithKumar #RajendraBalaji #In4Net #AIADMK

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader