IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உரமோசடி! ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

Get real time updates directly on you device, subscribe now.

உரமோசடி வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட்டின் நிறுவனம் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் என்பவர், அனுபம் கிரிஷி என்ற பெயரில் விதைகள் மற்றும் உர வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2007-08 காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உர மோசடி விவகாரத்தில் இவருக்கு தெடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அக்ராசென் கெலாட் அரசின் மானியத்தை பெற்று, மியூரியேட் ஆப் பொட்டாஷ் உற்பத்தி செய்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், அவருக்கு சுங்கத்துறை ரூ.7 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்நிலையில் இந்த உரமோசடி வழக்கு தொடர்பாக ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் டில்லியில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அக்ராசென் கெலாட்டின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும், முன்னாள் எம்.பி., பத்ரிராம் ஜகார் வீட்டிலும் சோதனை நடந்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீன் சுர்ஜிவாலா கூறுகையில், ராஜஸ்தானில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் தந்திரங்கள் தோல்வியடைந்த பின்னர் எம்.எல்.ஏ., கிருஷ்ண பூனியா வீட்டில் ரெய்டு நடந்தது. அவர் விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்று தந்துள்ளார். சோதனை என்ற பெயரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader