IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முதல்வர் பதவி அதிர்ஷடத்தால் கிடைத்ததா..? ரஜினியை கண்டித்த ஓ.பி.எஸ்

148


கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமல்ஹாசன் திரைவாழ்வில் 60 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்னும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி அதிர்ஷடத்தால் கிடைத்தது என்று கூறினார். இவரது கருத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டிக்கும் விதமாக கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 10 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தி நிருபர்களிடம் பேசியதாவது, ரஜினிகாந்த் கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஓ.பி.எஸ் கூறியதாவது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ரஜினிகாந்த் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வருக்கு கிடைத்த பதவி அதிர்ஷடத்தால் கிடைத்தவை அல்ல. எந்தத் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என ஓ.பி.எஸ். கூறினார்.