IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோ பரவல் தடுப்பிற்கு கை கொடுக்கும் தெற்கு ரயில்வே

66

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ரயில் பெட்டிகளை மருத்துவமனை வார்டுகளாக மாற்ற தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது.

கொரனோ வைரசால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரனோ வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.

உலகளவில் கிட்டத்தட்ட பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14ஐ தொட்டுள்ளது.

Related Posts
1 of 4

இந்நிலையில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான வார்டுகள் அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

அதாவது 1000 பேருக்கு 3 தனிமையான படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கும் விஷயமாகும். இதனையடுத்து படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது.

இந்த சிக்கலை தீர்க்க கைகொடுக்கிறது இந்திய ரயில்வே துறை. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம், அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை, கொரனோ அவசர வார்டுகளாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More