IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ராகுலுக்கு இத்தாலியில் மொட்டை போட்டாங்களா, இல்லையா ? ராஜேந்திர பாலாஜி ஆராய்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தில் தற்போது பள்ளி கல்விமுறை, குடிநீர் பிரச்சனை , போக்குவரத்து புதிய சட்டம் போன்ற ஆயிரத்து எட்டு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மொட்டை போட்டது யார் அல்லது யார் மடியில் அமர்ந்து மொட்டை போட்டார்கள் என ஆராய்ச்சி செய்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.


பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற தனியார் தொலைக்காட்சி பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியனே கிடையாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


தமிழக முதல்வர் பழனிச்சாமி சில தினங்களுக்கு முன் அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் சில அமைச்சர்களும் சென்றனர். அதில் ஒருவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஆவார். அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆரம்பத்தில் நன்றாக செயல்பட்டு வந்த விண்கலம் சிறிது நேரத்தில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு பிரச்சனையில் சிக்கியது.


இதுகுறித்து கேள்வி கேட்டதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார். அதில் சந்திராயன் 2 விண்கலம் பிரச்சனையில் சிக்கியதற்கு அமைச்சர் உட்பட வெளிநாட்டு அமைச்சர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்ததாக கூறினார். மேலும் ஒரு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே செயல்படுத்த முடியும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் என்ன செய்திருக்க முடியும் ? என்று பதிலளித்தார்.


பிரச்சனையில் சிக்கிய சந்திராயன் விண்கலம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை பிரதமர் மோடி அரவணைத்து அழுகாமல் சோகத்தை பிரதமரும் பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடி ஓர் இந்தியாவின் விதை என்பதற்கு அடையாளமாக திகழ்பவர் மோடி என்றார். ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்க முடியுமா என்றார்.


ஏன் நடந்திருக்க முடியாது என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு, ராகுல் காந்தி ஓர் இந்தியனே கிடையாது. அவர் எப்படி இந்தியனின் துயரை உள்வாங்கி இருக்க முடியும் என்றார். ராகுல் காந்தியின் தாய் இத்தாலி, தாய் மாமனும் இத்தாலி. பின்பு எப்படி ராகுல் காந்தி மட்டும் இந்தியனாக இருக்க முடியும் என்றார்.


ராகுல் காந்தி பிறந்தது, வளர்ந்தது அனைத்தும் வெளிநாட்டில் தான். தமிழ்நாட்டில் பிறந்த ஒருவன் அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு அமெரிக்க பிரஜை ஆகிறான். ஆனால் அமெரிக்காவில் ஒலு கஷ்டம் என்றால் பதற மாட்டான். ஆனால் இந்தியாவில் ஒரு பிரச்சனை என்றால் தான் அவன் மனம் பதறும்.


வெள்ளை அறிக்கையுடன் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் கொடுப்போம்
தமிழகத்தில் பிறந்த நான் சிவகாசியில் ஒரு பிரச்சனை என்றால் சென்னையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன பிரச்சன என விசாரித்து கேட்பேன். ஆனால் இந்தியாவில் பிறக்காத ராகுல் காந்திக்கு எப்படி இந்தியனின் நிலை புரியும் என கேட்டார். ஆனால் ராஜீவ் காந்திக்கு இந்திய உணர்வு இருந்தது. நேருவின் மகள் ஓர் இந்தியர். அவர்களுக்கு மட்டும் இந்திய உணர்வு இருந்தது.


ராகுல் காந்திக்கு யார் மடியில் அமர்ந்து மொட்டை போட்டார்கள் ? அவரது தாய்மாமன் மடியிலா என ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். நான் எனது தாய்மாமன் மடியில் தான் அமர்ந்து மொட்டை போட்டேன். காது குத்திவிட்டார்கள். ஆனால் ராகுல் காந்திக்கு இத்தாலியா அல்லது இந்தியாவிலா மொட்டை போட்டார்கள். அப்படி போட்டாலும் தாய்மாமன் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் மடியில் மொட்டை போட்டிருந்தால் எப்படி இந்தியனாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்.


கடைசியில் இந்தியாவில் இந்தியன் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் தமிழன் தான் ஆள வேண்டும். ஆனால் ராகுல் காந்தி சட்டத்தின் படி இந்தியன். ஆனால் நாங்கள் இந்தியனாக பார்க்க மாட்டோம். ராஜீவ் காந்தி மகனாக ராகுல் காந்தி இந்தியன், சோனியா காந்தியின் மகனாக பார்க்கும் போது இத்தாலியை சேர்ந்தவர் ராகுல் என்றார். ஆனால் ஒருபோதும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இந்தியனாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தனது உரையை முடித்தார் ராஜேந்திர பாலாஜி.
#RajendraBalaji #RahulGandhi #In4Net #Indian

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader