IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்திய கிரிக்கெட்டின் ‘சுவர்” ராகுல் டிராவிட் பிறந்த தினம் இன்று

Get real time updates directly on you device, subscribe now.

 

இந்திய கிரிக்கெட் அணியின் ‘சுவர்” என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இன்று தனது 47ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக கருதப்படும் கபில்தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி வரிசையில் இடம்பெற்றுள்ள ராகுல் டிராவிட்டுக்கு மற்றவர்களை காட்டிலும், தனிச்சிறப்பு உண்டு. கிரிக்கெட்டின் தூண் என்று அழைக்கப்படும் இவர் கிரிக்கெட் மட்டுமின்றி தன்னுடைய நடத்தையிலும் பலரின் மனங்களையும் வென்றவர்.

தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட, திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் வரும் ‘புகைப்பழக்கம் புற்றுநோயைத் தரும்” என்று எல்லா மொழிகளிலும் பேசி தோன்றும் ராகுல் டிராவிட்டை கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட ரசிக்கிறார்கள் என்பது உண்மை.

அவரின் நிதானம் உலகத்தினரையே திரும்பி பார்க்க வைத்தது என்றால் மிகையாகாது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் சகஜம் என்றாலும் கூட, தனது வெற்றிகளைக் கூடச் சாதாரணமாகப் பார்க்கும் இயல்புடையவர் டிராவிட்.

கிரிக்கெட்டை நேசிக்கும் பலருக்கு ரோல் மாடலாகத் திகழும் அவர் இன்று தனது 47வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் உள்பட பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

#Rahul Dravid’s #birthday #today

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader