IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ராகுல் காந்தி கைது! உ.பி. போலீசார் தாக்கியதால் பரபரப்பு

Get real time updates directly on you device, subscribe now.

நாட்டையே உலுக்கிய உ.பி.யில் பாலியல் வன்முறையால் உயிரிழந்த பெண்ணை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை உத்திர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். உ.பி. ஹத்ராஸில் நடைபெற்ற இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரத்தை சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19வயது இளம் பெண், அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருக்கும் உயர்ஜாதியை சேர்ந்த 4 இளைஞர்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். நடந்தவற்றை வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நாக்கையும் அறுத்தனர்.

படுகாயங்களுடன் மீட்ட அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேரக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில் அந்த பெண்ணின் முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் சிகிச்சையில் கண்டு பிடிக்கப்பட்டது.

உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அந்தப்பெண்ணை டெல்லி சப்தர்ஜிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியிலும், உத்திரபிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். பின்பு கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாலியல் வன்முறையில் உயரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க உ.பி. காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் ராகுல் காந்தி இருவரும் இன்று ஹத்ராஸ் புறப்பட்டனர்.

அப்போது அவர்களது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல் காந்தி மற்றும் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு யமுனா விரைவு நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நடந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தி உ.பி. போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader